ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2026 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை வரவேற்க இந்த புத்தாண்டு பிறந்துள்ளது.
கோயில்கள் தேவாலயங்களில் நேற்று இரவு முதல் வழிபாடு, திருப்பலி ஆகியவை நடந்தன.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் புத்தாண்டு களைகட்டின.
இந்த நிலையில் அரசியல், சினிமா பிரபலங்கள் புத்தாண்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தான் நடிக்கும் ஜனநாயகன். படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

“நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லோரும் நல்லா இருப்போம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் புதிய போஸ்டரை விஜய் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜயும் களம் காண்கிறார். எனவே, இந்த ஆண்டு முக்கியமான ஆண்டாக தமிழக மக்களுக்கு இருக்கும் நிலையில், எல்லோரும் நல்லா இருப்போம் என்று விஜய் வாழ்த்து கூறியிருப்பது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
