தவெக- காங்கிரஸ் பேச்சுவார்த்தையா? கார்த்தி சிதம்பரம் சொன்ன பதில் என்ன?

Published On:

| By Mathi

TVK Congress Karti Chidambaram

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறதா? என்பது குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறுகையில், “ காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணிக்கு இந்தியா அளவில் தலைமை தாங்குகிறது. இந்தியா கூட்டணியில் திமுக இருக்கிறது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு திமுக தலைமை தாங்குகிறது. காங்கிரஸ் அந்த கூட்டணியில்தான் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி, அதிகாரப்பூர்வமாக திமுகவுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதற்காகத்தான் ஐந்து நபர் குழு இருக்கிறது. இதுதான் காங்கிரஸின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சிக்குள் பல பேருக்கு பல ஒப்பீனியன் இருக்கும். காங்கிரஸ் மிகப் பெரிய கட்சி.. இதில் பலருக்கும் பல கருத்துகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதிகாரப்பூர்வமாக, காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share