தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்று வருகிறது.
மாநாடு பிற்பகல் 4 மணிக்கு தொடங்கியதும், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த தவெக தலைவர் விஜய், மாநாட்டு மேடைக்கு முன்பு போடப்பட்டிருந்த ரேம்ப் வாக்கில் நடந்து சென்றார். அப்போது கட்சி நிர்வாகி ஒருவர் விஜய்யை நோக்கி கட்சிக் கொடியை வீசினார். அதை எடுத்து விஜய், தனது தோளில் போட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து ரேம்ப் வாக் நோக்கி துண்டுகள் பறந்து வந்து விழத்தொடங்கியது. ஒவ்வொரு துண்டையும் விஜய் எடுத்து தனது தோளில் போட்டுக்கொண்டார். தொண்டர்கள் காட்டிய அன்பு மழையில் விஜய் திக்குமுக்காடினார். ரேம்ப் வாக்கில் தொண்டர்களை நோக்கி கையசைத்துவிட்டு, மேடைக்கு வந்த விஜய்யின் தோளில் தவெக கொடி குவிந்திருந்தது.
மிகவும் எமோஷனலாக மேடைக்கு வந்த விஜய், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இஸ்ரேலிய பெண் பைலட்டுகள் ஈரான் மீது தாக்குதல்: சுப்ரீம் லீடர் உடல் நிலை பாதிப்பு?