”டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்காமல், ஏன் போராட்டம் நடத்தி பாஜக நாடகமாடுகிறது?” என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (மார்ச் 17) கேள்வி எழுப்பியுள்ளார். tvk bussy anand questioned bjp on their protest against tasmac
கடந்த 6ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களில் மூன்று நாட்களாக அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
அச்சோதனையின் முடிவாக, டாஸ்மாக்கில் கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
இதுதொடர்பாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
விசாரணை நியாயமாக நடக்குமா? – விஜய் tvk bussy anand questioned bjp on their protest against tasmac
அதில், ”அமலாக்கத் துறை, டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்துப் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால், வெற்று விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஆனால், விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்” என விஜய் காட்டமாக விமர்சித்திருந்தார்.
பாஜகவினர் போராட்டம் – கைது!
இதற்கிடையே டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி டாஸ்மாக் அலுவலகத்தை இன்று முற்றுகையிட வந்த அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன்,வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பாஜகவினரின் இந்த போராட்டத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்? tvk bussy anand questioned bjp on their protest against tasmac
அதில், “அண்மையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரிவித்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாகச் செயல்பட்டு மேல்நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
மாறாக, அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜகவினர் தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை! நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர், முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்?
மற்ற மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?
புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி!
தற்போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க. – தி.மு.க. நடத்தும் நாடகப் போக்கினைப் பார்த்தால் என்ன தெரிகிறது? ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு, புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகின்றது.
இதை அம்பலப்படுத்தி ஏற்கெனவே எங்கள் கழகத் தலைவர் விஜய் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர். இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். இதுவே மக்கள் நலனை நோக்கும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
எனவே.,ஒன்றிய அரசுக்குத் தமிழக மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்குமெனில், டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் தொடர்ந்து மேல்நடவடிக்கை மேற்கொண்டு தவறு இழைத்தவர்களுக்கு, சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் வழியில் வலியுறுத்துகிறேன்” என ஆனந்த் தெரிவித்துள்ளார்.