தவெக கூட்டணியில் ‘தேசிய கட்சி’ + மாநில கட்சி.. நாஞ்சில் சம்பத்

Published On:

| By Mathi

nanjil Sampath TVK

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் தேசிய கட்சியும் மாநிலக் கட்சியும் இடம் பெற இருப்பதாக அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறியதாவது: தவெகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேசியக் கட்சியும் வரும், மாநிலக் கட்சியும் எங்கள் கூட்டணிக்கு வரும்.

ADVERTISEMENT

தமிழக அரசு தாக்கல் செய்தது பட்ஜெட்டே கிடையாது. அது ஒரு அறிக்கை.
பட்ஜெட்டில் கவர்ச்சித் திட்டம் ஒன்றுமே இல்லை. அதுகூட எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியவில்லை. ஒரு திட்டமும் அறிவிக்கவில்லை. எதுவும் அறிவிக்க முடியாது. இது இடைக்கால பட்ஜெட். எதையும் புதிதாக அறிவிக்க முடியாது. இருக்கிற நிலையைச் சொல்ல முடியும். அவ்வளவுதான் இந்த பட்ஜெட். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share