செங்கல்சூளை உரிமையாளர்களை மிரட்டிய நிர்வாகி – தவெக எடுத்த கிடுக்கிப்பிடி நடவடிக்கை!

By Pandeeswari Gurusamy

|

Published on 26 May 2026, 10:39 AM

செங்கல்சூளை உரிமையாளர்களிடம் மாமுல் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

செங்கல்சூளை உரிமையாளர்களிடம் மாமுல் கேட்டு மிரட்டியதாக தமிழக வெற்றிக் கழகத்தின்கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து தவெக தலைமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்:

“இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளராகப் பதவி வகித்து வந்த T.விஜயகுமார், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர் வகித்து வந்த ஒன்றிய செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.

ADVERTISEMENT

அவருடன் கழகத் தோழர்கள் கட்சி ரீதியாக எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel