தவெக 2 ஆவது மாநாடு நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சித் தலைவர் விஜய் மேடைக்கு வந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று (ஆகஸ்ட் 21), மதுரை பாரப்பத்தியில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் பலர் வந்துகொண்டிருக்கின்றனர்.

மங்கள இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியிருக்கும் நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் மேடையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், தாயார் சோபாவும் அமர்ந்துள்ளனர்.

தொடர்ந்து மாநாட்டில் விஜய் பட பாடல்களின் தொகுப்பு ஒலிபரப்பப்பட்டது. பின்னர், மக்களின் மன்னரே’ என்ற சிறப்பு பாடலுடன் விஜயை வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். தொண்டர்களை பார்த்து கையசைத்துக்கொண்டே வந்த விஜய், மேடையில் இருந்த தனது அப்பா, அம்மா உட்பட அனைவருக்கும் கைகொடுத்து கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார்.
விஜய்யை பார்த்ததும் காலையில் இருந்து காத்திருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
