ஸ்டாலினை அழைத்தால் பாஜகவில் இணைவோம்: பாதிரியார் பரபரப்பு!

Published On:

| By Selvam

தூத்துக்குடி மாவட்டத்தில் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பொன் விழா வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. பொன் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பாதிரியார்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலினை பொன்விழா நிகழ்ச்சிக்கு அழைத்தால் பாஜகவில் இணைந்து விடுவோம் என்று பாதிரியார் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மதுக்கடைகளை மூடப்போவதாக தேர்தலின் போது ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் தனது வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. பொறுப்புள்ள முதல்வராக அவர் செயல்படாமல் பொறுப்பற்ற மது வியாபாரியாகவே செயல்படுகிறார். அதுபற்றி கேட்டால் பல்லிளிக்கிறார்.

புனித வெள்ளி அன்று பாஜக, நாம் தமிழர், மதுவிலக்கு சபை அவரிடம் கெஞ்சி கேட்டும் மதுக்கடைகளை மூட மறுத்துவிட்டார். அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளுக்கு உரிய உரிமைகளை படிப்படியாக மறுத்து வருகிறார். இப்படி பல வகைகளில் கிறிஸ்துவ சமூகத்தை ஓரம்கட்டி வருகிறார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தூத்துக்குடி மறைமாவட்ட பொன்விழாவிற்கு அவரை அழைக்க முடிவு செய்துள்ளார்கள். முதல்வர் ஸ்டாலினை அழைப்பதாக இருந்தால் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும், இல்லை என்றால் தாங்கள் ஒரு கட்சி சார்பாக செயல்படுகிறீர்கள் என்பது பொருளாகும்.

ஸ்டாலினை அழைத்து ஆன்மிக காரியத்தை படு கேவலமாக படுகுழிக்குள் தள்ளிவிட வேண்டாம். அப்படி தான் அழைப்பேன் என்று தாங்கள் இறுமாப்பு கொண்டால் கிறிஸ்துவ சமூகமும் தங்களுக்கு தலையாட்டி பொம்மையாக மாறிவிட்டால் அப்படிப்பட்ட கிறிஸ்துவனை நம்புவதை விட பாஜகவை நம்புவதே மேல் என்று முடிவு செய்து கொள்கை உறுதிபடைத்த நாங்கள் பொன் விழா நேரத்திலேயே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து விடுவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த வீடியோவை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

செல்வம்

அதிரடி அரைசதம்: விஜய் சங்கர் கலக்கல்!

திருச்சி மாநாடு: சசிகலாவுக்கு அழைப்பா? – ஓபிஎஸ் பதில்!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share