ரோகித் விக்கெட்டை வீழ்த்துவது சாதாரணம்…சிஎஸ்கே வீரர் விளக்கம்!

Published On:

| By Jegadeesh

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்துவது சாதாரணம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே கூறியதாக கடந்த இரண்டு நாட்களாக பரவிய செய்திக்கு இன்று அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

கடந்த இரு போட்டிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இம்பேக்ட் பிளேயராக வந்த துஷார் தேஷ்பாண்டே, இந்தப் போட்டியில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார்.

மும்பை அணி சார்பாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா ஒரு சிக்சர் உட்பட 3 பவுண்டரிகளை விளாசி சிறப்பாக ஆடி வந்தார்.

ஆனால் இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே வீசிய இன்ஸ்விங்கரால் ரோகித் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து, ரோகித் சர்மாவின் மிடில் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டே மைதானத்தில் ஆரவாரமாக மகிழ்ச்சியை கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து மும்பை அணியின் மற்றொரு முக்கிய வீரரான டிம் டேவிட் விக்கெட்டையும் அவர் வீழ்த்தி அசத்தினார்.

இதனிடையே ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்துவது எளிது அவர் ஒன்றும் விராட் கோலியோ அல்லது டி வில்லியர்ஸ் போன்ற வீரரோ கிடையாது என்று தேஷ்பாண்டே பேசியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில், இதற்கு துஷார் தேஷ்பாண்டே விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஏப்ரல் 10) வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,

“அனைத்து லெஜன்ட்கள் மீதும் நான் மரியாதை வைத்துள்ளேன். இதுபோன்ற மோசமான கருத்துகளை நான் கூறவில்லை. இதுபோல் நான் ஒருநாளும் கூறவும் மாட்டேன். இது போன்ற வதந்திகள் பரப்புவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடைடே சென்னை – மும்பை அணி வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினாலும், களத்திற்கு வெளியில் ஒருநாளும் மோசமாக நடந்துகொண்டது இல்லை.

திடீரென துஷார் தேஷ்பாண்டே பேசியதாக பரவிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஸ்டெர்லைட் வழக்கு: மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

சட்டமன்ற தீர்மானம் எதிரொலி: ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

‘கை கட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்’: ஆளுநருக்கு எதிராக முதல்வர் தனி தீர்மானம்!

Tushar Deshpande confirms
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share