என்டிஏ கூட்டணியில் அமமுக… நயினார் பக்கம் பந்தை திருப்பி விட்ட டிடிவி

Published On:

| By Selvam

ttv dhinakaran says we are in nda alliance

என்டிஏ கூட்டணியில் தான் அமமுக இருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ttv dhinakaran says we are in nda alliance

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார்.

இந்தநிலையில், மே 18-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், நத்தம் விஸ்வநாதன் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், “2024 நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக, அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக, நாங்கள் என்டிஏ கூட்டணியில் தொடர்கிறோம். கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை என்டிஏ கூட்டணியின் தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்வது தான் சரியாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் என்டிஏ கூட்டணியில் தான் நாங்கள் தொடர்கிறோம் என்று தெரிவித்திருந்தார். இதை உறுதிசெய்யும் விதமாக தேசிய ஜனநாக கூட்டணியில் தான், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் உள்ளனர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ttv dhinakaran says we are in nda alliance

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share