2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை – டிடிவி தினகரன்

Published On:

| By Pandeeswari Gurusamy

ammk 15 resolutions

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

நமது மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை: தேர்தல் போட்டியில் இருந்து விலகும் டிடிவி என ஜனவரி 21ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஜனவரி 26, 2026) தேனியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வரும் சட்டமன்றத் தேர்தலில், “நான் போட்டியிடப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.  அவர்களை அமைச்சர்களாக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது; ஆனால் அதற்காக அழுத்தம் தர மாட்டேன்” என்று தெரிவித்தார்.
மேலும் ஓ. பன்னீர்செல்வமும் கூட்டணி குறித்து நல்ல முடிவை எடுப்பார் என்றும் அவர் கூறினார்.

மேலும் விஜய் குறித்து பேசுகையில், “ஊழலை ஒழிப்போம் என்று பேசும் விஜய், அவரது டிக்கெட் பிளாக்கில் விற்பதைத் தடுக்க முடியவில்லை. எம்ஜிஆர் படத்தை வைத்துக்கொண்டு அதிமுகவை ஊழல் கட்சி என்று எப்படிக் கூறலாம்?” என்று விஜய் மீது கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share