திருப்பதி: நவம்பர் மாத புக்கிங்… முழு விவரம்!  

Published On:

| By Kavi

TTD Special Entry Darshan Tickets for November

நவம்பா் மாத சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை 24-ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

திருமலை ஏழுமலையான் தரிசனம் தொடா்புடைய டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறை முன்பதிவு உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.

அதன்படி வரும் நவம்பா் மாதத்துக்கான இணையதள முன்பதிவு ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் வெளியிட உள்ளது.

அதன்படி ஆா்ஜித சேவைக்கான டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கல் செய்வதற்கான ஆன்லைன் பதிவு 19-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி காலை 10 மணி வரை நடைபெறும். இந்த டிக்கெட்டுகளைப் பெறுபவா்கள் ஆகஸ்ட் 21 முதல் 23-ம் தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி தங்களின் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவை டிக்கெட்டுகள், நவம்பா் 9-ம் தேதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் புஷ்பயாகம் சேவை டிக்கெட்டுகள் 22-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஏழுமலையானின் வா்ச்சுவல் சேவைகளுக்கான நவம்பா் மாத ஒதுக்கீடு 22-ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

நவம்பா் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீட்டை 23-ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.

ஸ்ரீவாரி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான நவம்பா் ஆன்லைன் ஒதுக்கீடு 23-ம் தேதி காலை 11 மணிக்கு தேவஸ்தானம் வெளியிடுகிறது.

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக நவம்பா் மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்களை 23-ம் தேதி மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

நவம்பா் மாத சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை 24-ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

திருமலை மற்றும் திருப்பதியில் நவம்பா் அறை ஒதுக்கீடு 24-ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஆகஸ்ட் 27-ஆம் தேதி திருமலை – திருப்பதி ஸ்ரீவாரி சேவை ஒதுக்கீடு காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: நீண்ட தலைமுடி பெற… இதைப் பின்பற்றுங்கள்!

கிச்சன் கீர்த்தனா: பப்பாளிக்காய் சோள மசால் வடை!

பட்டதாரியை தொழில் முனைவோராக்கும் முதல்வர் மருந்தகம்’ திட்டம் – முழு விவரம்!

‘GOAT’ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share