நவீன உலகில் வரும் ஸ்பீக்கர்களில் வாடிக்கையாளர்கள் streaming services, multi-room options, long life battery போன்ற வசதிகள் அதிகம் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். பொதுவாக அனைத்துப் பொருட்களிலும் மக்கள் விரும்பும் பொதுவான விஷயங்கள் தான் என்றாலும் தற்போதைய காலத்தில் வரும் ஸ்பீக்கர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தரத்துடன் வருவது அரிதாகிவிட்டது.
அதிகமான அளவில் Volume வைக்கும்போது இரைச்சல் ஏற்படுவது அல்லது குறுகிய காலத்தில் ஸ்பீக்கரின் தரம் குறைந்துவிடுவது போன்றவைகள் தான் அதிகம். ஆனால், இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாமல் Sony நிறுவனம் சிறந்த தயாரிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த Sony DAV-TZ145 ஸ்பீக்கரில் மக்கள் விரும்புவது போன்ற multi-room option 5.1 ஆப்ஷனுடன் வருகிறது. மிக அருமையான சவுண்ட் குவாலிட்டியை கொடுத்துவிடும் இந்த ஸ்பீக்கரில் AUTO SCAN TUNING உள்ளது. அதுமட்டுமின்றி கேட்கும் பாடலின் electronic பீட்ஸ் முதல் பின்னால் பயன்படும் சிறிய அளவிலான இசையையும் தனியாக எடுத்து நம் காதில் சேர்த்துவிடும். S-Master digital amplifier உடன் டால்பி ஆப்ஷன் இல்லாமலே சவுண்டின் குவாலிட்டியை மாற்றிக்கொள்ளும். மேலும் இதில் DVD Home Cinema System கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்பீக்கரில் DVD ஆப்ஷனும் இருக்கிறது. இதன் விலை ரூ. 11,990 ஆகும்.
