சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம்: என்னாச்சு?

Published On:

| By Aara

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை பதவியில் இருந்து நீக்க கோரி அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் பேரவை செயலகத்தில் கொடுக்கப்பட்டது. அதை இன்றைக்கு எடுத்துக் கொள்ளாததால், அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. trust motion against Speaker Appavu

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 14) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர்,  “எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் ஏற்கனவே 11-1-25 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 68 இன்படி பேரவைத் தலைவரை பதவி நீக்கக் கோரி கடிதம் வழங்கியுள்ளார். இன்று, சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கியதும், பேரவை விதியின்படி முன்னறிவிப்பு காலம் 14 நாட்கள் முடிந்துவிட்டதால், கொடுத்த தீர்மானத்தை இன்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உதயகுமார் கேட்டுக் கொண்டார்.  ஆனால் இதை பேரவைத் தலைவர் நிராகரித்துவிட்டார்.

முந்தைய அரசு அதிமுக இருக்கும்போது நடந்ததை சுட்டிக் காட்டினார். அது ஏற்புடையதல்ல. அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அன்றைய சபாநாயகர் தனபால் மீது கொண்டுவந்த தீர்மானத்தை, 14 நாட்கள் முடிந்தவுடன் எடுத்துக் கொண்டோம். இது வரலாறு. யாரும் மறுக்க முடியாது. trust motion against Speaker Appavu

எனவே  சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கொண்டுவந்த தீர்மானத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இதை சுட்டிக் காட்டியும் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்” என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share