போயிங் 757 ல் வந்து இறங்கி குப்பை லாரியில் ஏறிய ட்ரம்ப்… வாயை வச்சுட்டு சும்மா இரு குரங்கு கதை!

Published On:

| By Kumaresan M

இந்திய அமெரிக்கர் ஒருவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதையும், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை இருப்பதையும் பார்க்கும்போது, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு சிறந்த வரவேற்பு இருப்பதை காண முடிகிறது. கடந்த முறை துணைஅதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரீஸ் இந்த முறை ஜனநாயக கட்சி சார்பாக அதிபருக்கு போட்டியிடுகிறார். முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் குடியரசு  கட்சி சார்பாக களம் கண்கிறார்.

ஆனால், வாய வச்சுட்டு சும்மா இரு குரங்கு கதையாக அவ்வப்போது தற்போதைய அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ஏதையாவது உளறி கொட்டி ட்ரம்புக்கு அட்வான்டேஜ் எடுத்து  கொடுத்து விடுகிறார்.

அந்த வகையில் , இரு நாட்களுக்கு முன்பு டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களை பார்த்து பைடன் ‘குப்பைகள்’ என்று விமர்சித்தார். பைடனின் விமர்சனத்துக்கு அமெரிக்காவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, பைடனின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக ஒரு காரியத்தை செய்துள்ளார்.

அதாவது , விஸ்கான்சின் மாகாணத்தின் மேடிசன் நகருக்கு தனக்கு சொந்தமான போயிங் 757 விமானத்தில் சென்று இறங்கிய ட்ரம்ப் துப்புரவு பணியாளர்கள் அணியும்  பாதுகாப்பு ஆடையை தனது கோட் மீது  அணிந்திருந்தார். பின்னர், அவரை வரவேற்க வந்திருந்த குப்பை லாரியில் ஏறி சிறிது தூரம் சென்றார். அப்போது, ஜோ பைடன், கமலா ஹாரீசை விமர்சிக்கும் வகையில், அவர்களுக்கு மரியாதை  செய்யும் வகையில் இதை செய்துள்ளதாக  ட்ரம்ப் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்க மக்களை வெறுப்பவர்களை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 பேசாத திருமா….  ஒதுக்கப்பட்டாரா ஆதவ் அர்ஜுனா?

ராஜேஷ் கன்னாவுக்கும் அக்ஷய் குமாருக்கும் என்ன தொடர்பு தெரியுமா? குரங்குகளுக்கு 1 கோடி வழங்கிய பின்னணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share