அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் பண பரிமாற்றங்களுக்கு 5% வரி விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பரிமாற்றம் செய்யும் நபர் அமெரிக்கராக இல்லாவிட்டால் எந்த ஒரு சர்வதேச பணப் பரிமாற்றத்திற்கும் இந்த வரி பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் எவ்வளவு ரூபாய் பணம் அனுப்பினால் இந்த வரி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை சொந்த ஊர்களுக்கு அனுப்புவது வழக்கம். 5 Percent tax on money transfers from US
அப்படி வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணம் அந்நிய செலாவணியாக இந்தியாவிற்கு சேர்கிறது. Percent tax on money transfers from US
அந்திய செலாவணி இந்தியாவிற்கு அதிக அளவிற்கு வரும்போது அது நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் பலமாக அமைகிறது.
வர்த்தகத்தின் மூலமாகவும் அல்லது வெளிநாட்டில் வேலை பார்க்கும் நபர்கள் அனுப்பும் பணத்தின் மூலமாகவும் இந்தியாவிற்கு அதிக அந்நிய செலாவணி கிடைக்கிறது.
இதன் மூலமாக கிடைக்கும் அந்நிய செலாவணி மூலம் இந்தியாவில் வர்த்தகம் நடைபெற்றால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.
ஒருவேளை அன்னிய செலாவணி கையிருப்பு அதிகம் இல்லாத சூழல் ஏற்பட்டால் டாலர்களை வாங்குவதற்காக இந்தியா அதிக அளவிற்கு பணத்தை அச்சடிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
அப்படி ஏற்பட்டால் அது நம்முடைய பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். 5 Percent tax on money transfers from US
இதனால் நாட்டில் பணவீக்கமும் அதிகமாகும். அதனின் எதிரொளியாக நாட்டின் பணத்தின் மதிப்பு மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சி அடையும்.

இதற்கு ஒரு முக்கியமான காரணமாக அமைவது உலக அளவில் வர்த்தகத்திற்கு டாலர்களை புது நாணயமாக பயன்படுத்துகிறார்கள்.
இதன் காரணமாகவே ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு டாலர் கையிருப்பு என்பது மிக முக்கியமானதாக அமைகிறது.
மத்திய ரிசர்வ் வங்கியின் மார்ச் மாதத்தின் அறிக்கையின்படி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்புதல் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 23 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 27% ஆக அதிகரித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி அமெரிக்காவில் கிட்டத்தட்ட 54 லட்சம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆண்டு தரவுகளின் படி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவிற்கு அந்நிய செலாவணியை அனுப்புகிறார்கள். அதில் அமெரிக்காவிலிருந்து 2 லட்சம் கோடி ரூபாயை மட்டும் அனுப்பப்படுகிறது.
ஒருவேளை இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியர்களுக்கு மட்டும் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்புகள் ஏற்படும்.
சமீபத்தில் (மே 9) இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 4.5 பில்லியன் டாலர் (3.8 லட்சம் கோடி) அதிகரித்து 690.42 பில்லியன் டாலராக (59 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.