அமெரிக்க அதிபர் டிரம்ப்பின பரஸ்பர வரிவிதிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. Trump tax ban lifted
உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பரஸ்பர வரிவிதித்தும், சீனா மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தும் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
குறிப்பாக சீனாவுக்கு 145 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டது.
டிரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் பல மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டன.
இந்த வரி விதிப்பு கட்டணங்கள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும் அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் அவற்றை செயல்படுத்துவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மன்ஹாட்டன் (manhattan)வர்த்தக நீதிமன்றம் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில் பிற நாடுகளுடனான வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு தான் உண்டு. பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான அதிபரின் அதிகாரம் அந்த உரிமையை மீற முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து டிரம்ப சார்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
வரிவிதிப்பு விவகாரத்தில் வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம் வரிவிதிப்பை நிறுத்தி வைப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறி மன்ஹாட்டன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.
தற்காலிகமாக வரிவிதிப்பு நடவடிக்கைக்கு அனுமதியும் வழங்கியுள்ளது. Trump tax ban lifted
