ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்ச் 4-ஆம் தேதி தெரிவித்தார்.
அமெரிக்க காங்கிரஸ் சபையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றுகையில், “மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக நமக்கு எதிராக வரிகளை பயன்படுத்தி வருகின்றன. தற்பொழுது அவர்களுக்கு எதிராக நாம் இதனை பயன்படுத்துவோம்.
ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், இந்தியா மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக வரிகளை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.
இந்தியா நம்மிடம் 100 சதவீதம் வரிகளை வசூலிக்கிறது. இந்த அமைப்பு அமெரிக்காவிற்கு நியாயமாக இல்லை. ஏப்ரல் 2-ஆம் தேதி பிறகு பரஸ்பர வரிகள் தொடங்குகின்றன. அதன்படி, மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதிக்கிறார்களோ, அதே வரியை நாம் அவர்களுக்கு விதிக்க வேண்டும்.
அவர்கள் எங்களை தங்கள் சந்தையிலிருந்து விலக்கி வைக்க பணமற்ற வரிகளை விதித்தால், நாங்களும் அதனை அமல்படுத்துவோம்” என்று டிரம்ப் தெரிவித்தார். Trump tariffs on India take effect