சீனாவிற்கு 104% : தொடரும் வர்த்தக போர்!

Published On:

| By Kavi

Trump tariffs 104 percent tariff for China

அமெரிக்காவின் பொருட்களுக்கு எந்தெந்த நாடுகள் வரியை விதிக்கிறதோ அவர்களுக்கு இணையான வரியை நாங்களும் விதிப்போம்’ என்று கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய அளவிற்கு எதிர்ப்புகள் எழுந்தன. Trump tariffs 104 percent tariff for China

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா 34 சதவீத வரியை விதித்த நிலையில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா மீண்டும் 34 சதவீத வரியை விதித்தது.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக ஆசிய பங்குச் சந்தை மட்டும் இல்லாமல் அமெரிக்க பங்குச் சந்தையும் மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது.

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா விதிக்கும் வரி அவை மீண்டும் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கே மிகப்பெரிய பாதிப்பாக அமையும். அதற்கான முக்கிய காரணம் அமெரிக்காவினுடைய பல நிறுவனங்களின் உற்பத்தி மையமாக சீனா விளங்கி வருகிறது.

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா விதிக்கும் ஒவ்வொரு சதவீதமும் அது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கே மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்காவுக்கு எதிராக சீனா விதித்துள்ள பதிலடி வரிவிதிப்பை செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை சீனா நீக்காத நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவிற்கு 104 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

புதன்கிழமை முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரிகளை வசூலிக்க தொடங்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் தெரிவித்தார். Trump tariffs 104 percent tariff for China

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share