மோடி எனக்கு நண்பர் தான்… ஆனால்! – இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் ஆக்‌ஷன்!

Published On:

| By Selvam

Trump slaps 26 percent tariffs on India

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஏப்ரல் 3) 26 சதவிகிதம் வரி விதித்துள்ளார். Trump slaps 26 percent tariffs on India

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், பல அதிரடி நடவடிக்களை மேற்கொண்டு வருகிறார்.

பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவுக்கு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் என்று அறிவித்திருந்தார்.

அந்தவகையில், டிரம்ப் இன்று அறிவித்துள்ள பரஸ்பர வரிவிதிப்பின்படி, இந்தியா 26%, சீனா 34%, தென் கொரியா 25%, ஜப்பான் 24%, தைவான் 32%, சுவிட்சர்லாந்து 34%, இங்கிலாந்து 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா குறித்து டிரம்ப் பேசும்போது, “சமீபத்தில் தான் பிரதமர் மோடி என்னை நேரில் சந்தித்தார். அவர் எனக்கு சிறந்த நண்பர் தான். ஆனால், வரி விகிதத்தில் இந்தியா எங்களை சரியாக நடத்தவில்லை. இந்தியா எங்களுக்கு 52 சதவிகிதம் வரி வசூலிக்கிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு அவர்களுக்கு நாங்கள் வரி வசூலிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

டிரம்ப் விதித்துள்ள வரியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. Trump slaps 26 percent tariffs on India

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share