டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கட்கிழமையான இன்று 41 பைசா குறைந்து 85.65 ரூபாயாக அதிகரித்தது. Indian Rupee drops
கடந்த வாரத்தில் இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று இந்திய ரூபாயின் மதிப்பு 85.24 ரூபாயாக இருந்தது. Indian Rupee drops
ரூபாயின் மதிப்பு திடீரென சரிந்ததற்கான காரணமாக இருப்பது கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக அறிவித்த பரஸ்பர வரிவிதிப்பு.
இதனால் உலகில் உள்ள பல நாடுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலக அளவிலுள்ள எல்லா பங்கு சந்தைகளும் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
பங்குகள் மிக வேகமாக விற்றுத் தள்ளப்படுவதால் அதனுடைய தாக்கம் இந்திய ரூபாயில் பிரதிபலித்திருக்கிறது.
இன்றைய ரூபாயின் வீழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மோசமான அளவில் குறைந்துள்ளது.
குறிப்பாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவுக்கு எதிராக அமெரிக்கா 34 சதவீத வரியை விதித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் அமெரிக்காவுக்கு எதிராக 34% வரிகளை விதித்தது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவும் உலகின் மிகப்பெரிய சந்தையாக விளங்கும் சீனாவும் இடையில் ஏற்படும் வர்த்தகப் முரண்பாடுகள் அதனால் ஏற்படும் வர்த்தக பதற்றத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெயின் விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் கச்சா எண்ணெயின் விலை சரிந்தும் அதனால் மக்களுக்கு எந்த வித பயனும் ஏற்படாத நிலைமை தான் இருக்கிறது. Indian Rupee drops
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த காரணத்தினால் அதிக அளவிற்கு ரூபாய்களை வைத்து டாலர்களின் மூலமாக கச்சா எண்ணெய் வாங்கும் காரணத்தினால் அதிக அளவில் செலவினங்களும் மற்றும் பொருளாதார சுமையும் ஏற்படுகிறது.
இதனால் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, மேலும் ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி அடைவதற்கான காரணங்களாக அமைகிறது.
தற்போதையே இந்தியாவின் அந்நிய செல்லாவனி கையிருப்பு 665.4 பில்லியன் டாலராக உள்ளது.
இதற்கிடையில், ரூபாயின் வீழ்ச்சி மற்றும் பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்ட நிலையில் இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் தொடங்கிய நிலையில் இந்திய முதலீட்டாளர்கள் இடையே மிகப்பெரிய அளவில் கவனத்தை பெறுகிறது.
இந்தக் கூட்டமானது ஏப்ரல் 7ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.