ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக நாளை (மார்ச் 18) பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். trump phone call with putin on ukraine war
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த மாதம் டிரம்பை நேரில் சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்காவின் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார். இதனையடுத்து உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ மற்றும் உளவு தகவல்கள் உதவிகளை அமெரிக்கா நிறுத்தியது. இதனால் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்க உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

தொடர்ந்து கடந்த வாரம் சவுதி அரேபியாவில் நடைபெற்ற அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில், ’30 நாள் போர் நிறுத்தம்’ என்ற அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து மீண்டும் ராணுவ மற்றும் உளவு தகவல்களை அமெரிக்கா வழங்கத் தொடங்கியது.எனினும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இன்னும் இருப்பதாக கூறி ரஷ்ய அதிபர் புதினால் அமெரிக்காவின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.
டிரம்பை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்! trump phone call with putin on ukraine war
இதனையடுத்து உலக நாடுகளுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக, உக்ரைன் மீதான குண்டுவீச்சுகளை தீவிரப்படுத்திய ரஷ்யாவை விமர்சித்தார் டிரம்ப். அவர் “ஏற்கனவே கடும் தடைகள் விதிக்கப்பட்ட ரஷ்யாவின் மீது மேலும் அதிக தடைகள் விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
எனினும் தனது சொந்த ஆதாயத்திற்காக கூட்டாளி நாடான உக்ரைனிடம் கண்டித்து, விரோதி நாடான ரஷ்யாவிடம் நட்பு பாராட்டி வருவதாக அமெரிக்க எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மேலும் எதிர்காலத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவும் பிற நட்பு நாடுகளும் அதைப் பாதுகாக்க வர வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கைக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்து வருவதேன் என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

புதினுடன் பேசுவேன்! trump phone call with putin on ukraine war
இந்த நிலையில் புளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்கு திரும்பிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “வரும் செவ்வாய்க்கிழமை நான் ஜனாதிபதி புதினுடன் பேசுவேன். வார இறுதியில் நிறைய வேலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.
இந்த அழைப்பில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் விரைவான போர்நிறுத்தத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ”டிரம்ப்-புதின் தொலைபேசி அழைப்பு இந்த வாரம் நடக்கக்கூடும். நாங்கள் தொடர்ந்து உக்ரேனியர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடி வருகிறோம்” என்று விட்காஃப் முன்பே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.