நண்பன் ஒருத்தன் இன்னைக்கு ஆபிஸ்ல, “மச்சான்… வாழ்க்கையே வெறுப்பா இருக்கு. கடல்ல விழுந்து சாகப்போறேன்னு” சொன்னான்.
“டேய்… அந்த மாதிரி விபரீத முடிவெல்லாம் எடுக்காதடான்னு” அவன்கிட்ட சொன்னேன்.
“மச்சான்… என் மேல உனக்கு அவ்வளவு பாசமாடான்னு” கேட்டான்.
“இல்லடா… ஆபிஸ் பக்கத்துல இருக்குற 11 மாடி கட்டடத்துல இருந்து கீழ விழுந்துரு. அப்பதான் கண்டிப்பா உன்ன காப்பாத்த முடியாது. கடல்ல விழுந்தா நீயே தப்பிச்சு வந்துருவன்னு” சொன்னேன்.
பயபுல்ல கோவிச்சிக்கிட்டு கிளம்பிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
முன்பு ஏதாவது அவசர தேவை இருக்கும் என்று டாக்டர் என்று மட்டும் கார்களில் ஸ்டிக்கர் இருக்கும்
இப்போ குடும்ப நபர்களின் பெயரில் இருந்து ஜாதகமே எழுதி வெச்சிருக்காங்க…

ArulrajArun
500 ரூபாய் நோட்டில் இருக்கும் இந்தியை அழிங்க பார்ப்போம் – பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா
-நாங்க ஏன்டா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகணும் …

நெல்லை அண்ணாச்சி
அமெரிக்காவில் இருந்து
நாடு கடத்தப்பட்ட 400 பேரில் ஒருவர் கூட தமிழர் கிடையாது …
– தமிழன்….டா…!!!
செங்காந்தள்
சோம்பல் எளிதானதையும் கடினமாக்கும்,
சுறுசுறுப்பு கடினமானதையும் எளிதாக்கும்…

Sasikumar J
வாக்கிங், ஜாக்கிங் போறவங்களுக்கு (AirPod) ஏர்பேட்யே துணை..!
ச ப் பா ணி
நேர்ல வா தருகிறேன்..கேரளா வா தருகிறேன்
-வாய்ஸ் டைப்பிங் கொடுமைகள்

mohanram.ko
என் கட்சிக்காரர் தற்போது ஊரில் இல்லாத காரணத்தினால், அவரது போட்டோவை சிறையில் அடைக்குமாறு கேட்டு கொள்கிறேன்

கடைநிலை ஊழியன்
என்னப்பா green tea குடிச்சாலும் வெயிட் குறைய மாட்டிங்குது..
வெயிட்ட குறைக்க முதல்ல வாய குறைக்கணும் டா..

லாக் ஆஃப் trolls update kumaru