நம்பர் 1 இடத்தை தக்கவைத்த திரிஷா… சம்பளம் எவ்ளோன்னு பாருங்க!

Published On:

| By Manjula

தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற இடத்தை, ரசிகர்களின் பேவரைட் நடிகையான  திரிஷா தக்க வைத்துள்ளார்.

2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. அந்த படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்து விட்டன.

ஆனால் இன்றும் தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற இடத்தினை திரிஷா தக்க வைத்திருக்கிறார். தற்போது திரிஷாவின் கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் சேர்த்து 12 படங்களும், 1 வெப் சீரிஸும் கைவசம் உள்ளன.

டில்லு ஸ்கொயர் : விமர்சனம்!

தமிழில் விடாமுயற்சி, தக் லைஃப், GOAT, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை ஆகிய படங்கள் அடுத்ததாக திரிஷா நடிப்பில் வெளியாக உள்ளன. தெலுங்கில் விஸ்வாம்பரா, அல்லு அர்ஜுன் படம், 1818, டகுபதி வெங்கடேஷ் படம் ஆகியவற்றில் நடிக்க இருக்கிறார்.

மலையாளத்தில் ராம், ஐடெண்டிட்டி மற்றும் பிருந்தா என்னும் வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்து வருகிறார். இந்தியில் தி புல் படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இதனால் திரிஷாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது.

மேலும் இதுநாள்வரை ரூபாய் 5 கோடியை சம்பளமாக வாங்கி வந்த திரிஷா தற்போது ரூபாய் 12 கோடியை சம்பளமாக பெறுகிறார். தக் லைஃப் படத்திற்காக அவர் இந்த சம்பளத்தினை வாங்கியிருக்கிறார்.

இதையடுத்து அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக திரிஷா மாறியிருக்கிறார். திரிஷாவின் சக நடிகைகளான நயன்தாரா, சமந்தா இருவரும் ஒரு படத்திற்காக ரூபாய் 8-10 கோடி வரை சம்பளமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணல் கொள்ளை வழக்கு: மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!

ஸ்டார் ஹீரோவிற்கு வில்லியாகும் ஆண்ட்ரியா?

GOLD RATE: லேசாக குறைந்த விலை… எல்லாமே கண் துடைப்பு தான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share