பிரபாஸ் – சந்தீப் வங்கா படத்தில் ‘அனிமல்’ நடிகை!

Published On:

| By christopher

tripti timir in prabhas sandeep reddy vanga film

’அனிமல்’ படத்தில் ராஷ்மிகா தவிர்த்து இன்னொரு நாயகியாகத் தோன்றியவர் திரிப்தி திம்ரி. ரன்பீர் கபூருடன் காதல் வயப்படுகிற காட்சிகளில் அவர் காட்டிய நெருக்கம் ரசிகர்களைக் குதூகலத்தில் ஆழ்த்தியது. tripti timir in prabhas sandeep reddy vanga film

அதன் தொடர்ச்சியாக, அவர் நடிக்கிற புதிய படங்களின் அப்டேட்கள், பழைய படங்கள் குறித்த தகவல்களைத் தேடத் தொடங்கினர். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியொன்றைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சந்தீப் வங்கா.

ADVERTISEMENT

‘அனிமல்’ படத்தைத் தொடர்ந்து, தற்போது இவர் ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்குகிற பணிகளில் மும்முரமாக இருக்கிறார். இந்த படத்தின் நாயகன் பிரபாஸ். இதில் நாயகியாக நடிக்க இருந்தவர் தீபிகா படுகோனே. இப்படத்தில் நாயகியாக திரிப்தி திம்ரி நடிப்பதாக அறிவித்திருக்கிறார். அதாகப்பட்டது, தீபிகாவுக்குப் பதிலாக இந்த புரொஜக்டில் திரிப்தி வந்திருக்கிறார்.

ADVERTISEMENT

’ஸ்பிரிட்’ படத்தில் வன்முறை அதிகளவில் இருக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார் இயக்குனர் சந்தீப் வங்கா. அதனை எதிர்பார்க்கிற ரசிகர்களுக்கு, இப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் ‘அல்வா’ போலத்தான் இருக்கும். அந்த வரிசையில் இந்த அறிவிப்பும் சேரும்.

இது தொடர்பான அறிவிப்பைத் தனது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள சந்தீப், திரிப்தி திம்ரியின் பெயரை ஆங்கிலம் உட்பட 9 மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மட்டுமல்லாமல் ஜப்பானீஸ், மாண்டரின், கொரிய மொழிகளிலும் அவர் பெயர் இருக்கிறது.

ADVERTISEMENT

அது ஏன் என்று உற்றுநோக்கினால், இப்படமானது அம்மொழிகளிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஆக, பிரபாஸின் இந்தப் படம் ‘பான் இந்தியா’வாக இல்லாமல் ‘பான் வேர்ல்டு’ எனும் உயரத்தை அடையவிருக்கிறது.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..?!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share