ED அதிகாரிகள் மீது தாக்குதல்: திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கைது!

Published On:

| By Monisha

shankar athya arrested by Ed

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நேற்று (ஜனவரி 5) தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். shankar athya arrested by Ed

மேற்கு வங்கத்தில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் உணவு, தானியங்களை வழங்கும் பொது விநியோக திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை ஏற்கனவே மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மாலிக்கை கைது செய்துள்ளது. தொடர்ந்து நேற்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஷாஜஹான் ஷேக், சங்கர் ஆத்யா ஆகியோரது வீட்டில் சோதனை செய்வதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் காரில் சென்றனர்.

அப்போது சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ படையினருக்கு காயம் ஏற்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற கார் கண்ணாடிகளும் உடைந்தன.

இது குறித்து நேற்று அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், “மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் திட்ட முறைகேடு தொடர்பாக வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஷாஜஹான் சேக் என்பவருக்கு சொந்தமான 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடைபெற்ற ஒரு இடத்தில் 800 முதல் 1000 பேர் வரை திரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகளையும் துணை ராணுவப் படையினரையும் கொலைவெறியோடு ஆயுதங்கள், லத்தி, கற்கள், செங்கற்களால் தாக்கினர். இதில் 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் மிக மோசமாக படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதிகாரிகளின் லேப்டாப், பர்ஸ் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு வன்முறை கும்பல் தப்பியது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாகனங்களையும் மிக மோசமாக அந்த கும்பல் தாக்கியது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த அதிகாரி சங்கர் ஆத்யா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து சங்கர் ஆத்யா வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 17 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

விமர்சனம்: ‘நெரு’ !

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி… துணை முதல்வருக்கு முன் பொறுப்பு முதல்வர்?

shankar athya arrested by Ed

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share