எம்.பி. பதவி பறிப்பு : சட்ட போராட்டத்தைத் தொடங்கிய மஹூவா மொய்த்ரா

Published On:

| By Kavi

Mahua Moitra petition Supreme Court

எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தா்ஷன் ஹீராநந்தானிடம் இருந்து 2 கோடி ரூபாய் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து, பாஜக எம்.பி வினோத் குமார் சோன்கர் தலைமையிலான நெறிமுறைகள் குழு விசாரணை செய்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி எம்.பி. பதவியில் இருந்து மஹூவா மொய்த்ராவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தன்னை எம்.பி பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மக்களவையிலிருந்து தன்னை வெளியேற்ற எடுக்கப்பட்ட முடிவு சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

பிரியா

மாயவன் படத்தின் பார்ட் 2 டைட்டில் இது தானா?

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா? – மெகபூபா முப்தி காட்டம்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share