கடலூர்: விசிக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வேன் விபத்து.. 3 பேர் பலி!

Published On:

| By Selvam

Trichy vck conference accident

திருச்சியில் நேற்று நடைபெற்ற விசிக மாநாட்டிற்கு சென்று ஊர் திரும்பிய நிர்வாகிகளின் வேன் மீது லாரி மோதிய விபத்தில், மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நேற்று விசிக சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த மாநாட்டிற்கு கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா பரங்கிப்பேட்டை அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த 25 பேர் வேனில் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

மாநாடு முடிந்து நேற்று இரவு ஊர் திரும்பியபோது விசிக நிர்வாகிகள் வந்த வேன் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேலம் – விருத்தாசலம் சாலையில் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உத்திரகுமார், யுவராஜ், அன்புசெல்வன் ஆகிய விசிக நிர்வாகிகள்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 23 பேர் விருத்தாசலம், வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து வேப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசிக மாநாட்டுக்கு சென்று ஊர் திரும்பிய நிர்வாகிகள் வேன் விபத்துக்குள்ளாகி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எங்க அப்பா சங்கி இல்லை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அற்புதமான உறவுகள் அமைய விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share