பாஜகவில் மீண்டும் திருச்சி சூர்யா: அண்ணாமலை அறிவிப்பு!

Published On:

| By Selvam

trichy surya suspension cancel bjp annamalai

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாஜக மாநில ஓபிசி அணியின் பொதுச்செயலாளராக இருந்தவர் திருச்சி சூர்யா. இவரும் பாஜக சிறுபான்மையினர் அணி மாநில தலைவர் டெய்சி சரணும் பேசிய ஆடியோ கடந்த ஆண்டு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆபாச ஆடியோ வெளியான விவகாரம் குறித்து இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து திருச்சி சூர்யாவை சஸ்பெண்ட் செய்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் திருச்சி சூர்யா தான் வகித்து வந்த பதவியிலேயே மீண்டும் தொடருவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (நவம்பர் 2) அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூர்யா சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியன் 2 : கமல் வீடியோவை வெளியிடும் ரஜினி

கேரள ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share