புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட கடிதத்தைக் காட்டி திமுக எம்.பி திருச்சி சிவா இன்று (மார்ச் 11) பதில் அளித்துள்ளார். trichy siva reply to dharmendra pradhan on nep 2020
நாடாளுமன்றத்தில், “தமிழக அரசு முதலில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துவிட்டு, பின்னர் பின் வாங்கியது” என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பேசியிருந்தார்.
அவரது பேச்சு தவறானது என்றும், புதிய கல்விக் கொள்கையை ஆரம்பம் முதலே தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தர்மேந்திர பிரதான் தமிழக முதல்வருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி திமுக எம்.பி திருச்சி சிவா இன்று தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கடிதமே தெளிவாக கூறுகிறது! trichy siva reply to dharmendra pradhan on nep 2020
அதில், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 15-3-2024 அன்று தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தைப் படித்தபோது, மாநிலங்களின் கவுன்சிலின் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 241 ஐ மேற்கோள் காட்டி, மத்திய கல்வி அமைச்சர் தமிழக முதல்வருக்கு எழுதிய மேற்கண்ட கடிதத்தின் உள்ளடக்கங்களைப் படிக்க நான் தலைவரின் அனுமதியைக் கோரினேன்.
இந்தக் கடிதம் தமிழ்நாடு அரசு NEP 2020 ஐ ஏற்கவில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வருக்கு பிரதான் 30/08/24 அன்று எழுதிய அக்கடிதத்தில், “2024-25 கல்வியாண்டில் PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்து, 15.03.2024 அன்று தமிழ்நாடு அரசு ஒரு உறுதிமொழி வழங்கியதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்த உறுதிமொழியைப் பெற்ற பிறகு, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DOSEL) தமிழ்நாட்டிற்கு ஒரு வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அனுப்பியது. இருப்பினும், 06.07.2024 தேதியிட்ட கடிதத்தில், NEP 2020 ஐ முழுமையாக செயல்படுத்துவது குறித்து குறிப்பிடும் முக்கிய பத்தி கைவிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் தமிழக அரசு பதிலளித்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்” என பிரதான் அதில் தெரிவித்துள்ளார்.
இதை குறிப்பிட்டு தான், “இந்தக் கடிதம் தமிழ்நாடு அரசு NEP 2020 ஐ ஏற்கவில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறது” என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.