திருச்சியில் சென்ட்ரல் கவர்மெண்ட் (ICAR) வேலை! எக்ஸாம் இல்லை… நேர்காணல் மட்டுமே! வெறும் டிகிரி இருந்தா போதும் பாஸ்!

Published On:

| By Santhosh Raj Saravanan

trichy icar nrcb junior project assistant recruitment 2026 details

“என்னப்பா… படிச்சு முடிச்சுட்டு நல்ல அரசு வேலை தேடிட்டு இருக்கியா? அதுவும் நம்ம ஊர் திருச்சியிலேயே ஒரு மத்திய அரசு நிறுவனத்துல வேலை கிடைச்சா எவ்ளோ கெத்தா இருக்கும்? ‘வேலை கிடைக்கலையே’ன்னு கவலைப்படுற தம்பி, தங்கச்சிகளா… இதோ உங்களுக்கான ஒரு சூப்பர் ஜாக்க்பாட் வாய்ப்பு!”

திருச்சி தாயனூரில் உள்ள மத்திய அரசின் ‘தேசிய வாழை ஆராய்ச்சி மையம்’ (ICAR-NRCB), தற்போது காலியாக உள்ள ஜூனியர் புராஜெக்ட் அசிஸ்டெண்ட் (Junior Project Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெரிய எழுத்துத் தேர்வெல்லாம் கிடையாது பாஸ்… நேரடியா நேர்காணல் (Interview) மூலமா தகுதியானவங்களை எடுக்கப்போறாங்க.

ADVERTISEMENT

யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்? (Eligibility Check)

இந்த வேலைக்கு ரொம்ப சிம்பிளான தகுதிகள் இருந்தாலே போதும். நீங்க கீழ இருக்குற ஏதாவது ஒரு டிகிரியை முடிச்சிருந்தா இந்த கோல்டன் டிக்கெட்டை தட்டித்தூக்கலாம்:

ADVERTISEMENT
  • கல்வித்தகுதி: பி.எஸ்சி (B.Sc) – விவசாயம் (Agriculture), தோட்டக்கலை (Horticulture), பயோடெக்னாலஜி (Biotechnology), மைக்ரோபயாலஜி (Microbiology) அல்லது லைஃப் சயின்ஸ் (Life Sciences) பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முதல் வகுப்பில் (First Class) முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு).
  • சம்பளம்: மாதம் ரூ. 15,000/- (தொகுப்பூதியம்) வழங்கப்படும்.

முக்கியமான விவரங்கள் (Registration & Dates):

  • காலியிடங்கள்: 2 இடங்கள்.
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 13, 2026.
  • விண்ணப்பக் கட்டணம்: ஒரு ரூபா கூட கிடையாது பாஸ்… விண்ணப்பிப்பது முற்றிலும் இலவசம் (Free).

விண்ணப்பிக்கும் முறை (How to Apply): இது ஆன்லைன் அப்ளிகேஷன் கிடையாது, ரொம்ப சிம்பிளா ஒரு ஈமெயில் அனுப்புனா போதும்:

ADVERTISEMENT
  • முதலில் ஐசிஏஆர்-என்ஆர்சிபி (ICAR-NRCB) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) டவுன்லோட் செய்யுங்கள்.
  • அதைப் பூர்த்தி செய்து, உங்களது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களைச் சுய சான்றொப்பம் (Self-attested) செய்து ஸ்கேன் பண்ணிக்கோங்க.
  • அனைத்தையும் ஒரே பிடிஎஃப் (PDF) கோப்பாக மாற்றி, nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

உங்களுக்கு டிஷ்யூ கல்ச்சர் (Tissue Culture) அல்லது லேப் ஒர்க்கில் ஏற்கனவே அனுபவம் இருந்தா, அந்த சர்டிபிகேட்டை மறக்காம இணைங்க. அது உங்களுக்கு ‘ஜாக்பாட்’ அடிக்க அதிக வாய்ப்பை உருவாக்கும். அப்ளை பண்ணுனவங்கள்ல தகுதியானவங்களை மட்டும் ஷார்ட்லிஸ்ட் பண்ணி, அவங்களுக்கு ஈமெயில் மூலமா நேர்காணல் தேதியை அறிவிப்பாங்க. அதனால உங்க ஈமெயிலை அடிக்கடி செக் பண்ணிக்கோங்க. திருச்சி லோக்கல்ல இருக்குறவங்களுக்கு இது ஒரு அருமையான சான்ஸ். டிராவல் டென்ஷன் இல்லாம சூப்பரா ஒர்க் பண்ணலாம்.

மத்திய அரசு நிறுவனத்துல ஒர்க் பண்ணுற அந்த எக்ஸ்பீரியன்ஸ், நாளைக்கு நீங்க பெரிய கம்பெனிகளுக்கு வேலைக்குப் போகும்போது உங்க ரெஸ்யூமுக்கு ஒரு தனி ‘வெயிட்டைக்’ கொடுக்கும். பிப்ரவரி 13 தான் லாஸ்ட் டேட் என்றாலும், கடைசி நிமிஷம் வரை வெயிட் பண்ணாம இப்போதே உங்க அப்ளிகேஷனை தட்டி விடுங்க பாஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share