திருச்சி கிழக்கில் போட்டியிடுவதற்காக நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று (ஏப்ரல் 2) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
பெரம்பூரில் போட்டியிடுவதற்காக கடந்த மார்ச் 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 2) சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விஜய் ரோடு ஷோவில் ஈடுபட்டார்.
பின்னர் பாலக்கரையில் இருக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த விஜய், சுமார் அரை மணி நேரமாக பிரச்சார வாகனத்திலேயே காத்திருக்கிறார்.
அதாவது 11.20 மணியளவில் பாலக்கரை மாநகராட்சி அலுவலகம் வந்த நிலையில் உடனடியாக உள்ளே சென்று வேட்புமனு தாக்கல் செய்யாமல் கேரவனில் காத்திருப்பதாகவும், 12 மணிக்கு மேல் நல்ல நேரம் என்பதால் அதுவரை கேரவனில் இருந்துவிட்டு அதன்பிறகு வேட்புமனு தாக்கல் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
