திருச்சி திமுக மாநாடு.. ஆயிரக்கணக்கான சமையல் பணியாளர்கள்.. சுடச் சுட தயாரான பிரியாணி விருந்து!

Published On:

| By Mathi

DMK Trichy Food

திருச்சியில் இன்று நடைபெறும் திமுக மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு சுடச் சுட பிரியாணி வழங்க பிரம்மாண்டமான ஏற்பாடுகளை திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு செய்துள்ளார்.

திருச்சியில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்தும் 10 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

ADVERTISEMENT

திமுக மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கான மதிய உணவாக பிரியாணி, சிக்கன் கிரேவி வழங்கப்படுகிறது. இதற்காக 3 இடங்களில் ஆயிரக்கணக்கான சமையல் பணியாளர்கள் பிரியாணி தயாரிக்கும் ஈடுபட்டுள்ளனர்.

பிரியாணியை பகல் 12 மணியில் இருந்து திமுகவினருக்கு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share