திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று (அக்டோபர் 11) மாலை 5.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் சார்ஜா நோக்கி புறப்பட்டது. விமானத்தின் சக்கரம் உள்ளே செல்லாததால், விமானத்தை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், விமானத்தை தரையிறக்க முடியாமல் வானிலேயே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்துக்கொண்டிருந்தது. பின்னர் இரவு 8.15 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இந்தநிலையில், விமானத்தில் பயணித்த கண்ணன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நான் துபாயில் ஒரு கம்பெனி வைத்திருக்கிறேன். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அங்கு சென்றுவருவேன்.
ஒரே இடத்தில் விமானம் 15 முறை சுற்றி சுற்றி வந்தது. அனைவரது மொபைலிலும் சிக்னல் இருந்தது. ஒருகட்டத்திற்கு மேல் தான் விமானம் ஒரே இடத்தில் சுற்றி வந்தது பயணிகளுக்கு தெரியவந்தது. அப்போது தான் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சியில் விமானம் லேண்ட் ஆகப்போகிறது என்று சொன்னார்கள்.
நியூஸில் விமானம் தரையிறங்குவதில் தாமதம் என்று செய்திகள் வந்ததும் அனைவரும் பயந்துவிட்டோம். 1.30 மணி நேரத்திற்கு பிறகும் லேண்ட் ஆகாததால், கொஞ்சம் பயம் அதிகமானது. விமானம் லேண்ட் ஆகும்போது ஏதாவது பிரச்சனையாகுமோ என்று நினைத்தோம். ஆனால், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இப்போது வரை ஹார்ட் பீட் அதிகமாக துடித்துக்கொண்டிருக்கிறது” என்று பதட்டத்துடன் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருச்சி : பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்!
திருச்சியில் 2 மணி நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானம் : 140 பயணிகளின் நிலை?