டீ குடிச்சிட்டு வடை பேப்பரை தூக்கி எறியும்போது நம்ம கவிஞர் வந்தாப்ல. ‘என்னய்யா… இஸ்ரோ அனுப்பியிருக்கிற நிலாவை பாத்தியா? காதல் படத்துல வர்ற ஹீரோயின் சந்தியாவோட அப்பா மூஞ்சி மாதிரியே இருக்கு. இந்த இலட்சணத்துல வட்ட நிலா, குட்டி நிலா, அந்த நிலா, இந்த நிலானு கவிதை எழுதிட்டிருக்கிங்களே…
இனிமே எந்த பொண்ணாவது இதுக்கெல்லாம் மயங்குவாளா? இஸ்ரோ நிலவேனு வேணா சொல்லிப் பாரு… அப்புறம் தெரியும் பொண்ணுங்க ரியாக்ஷன்’ அப்ப்டினு நான் சொன்னதும்,
வழக்கமா டீ சாப்ட்டு வண்டி வண்டியா பேசுறவரு டீ கூட குடிக்காம கெளம்பிட்டாப்ல…
நீங்க அப்டேட் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடத்துக்குப் பெயர் ‘சிவசக்தி’ – பிரதமர் மோடி அறிவிப்பு
நிலா பி லைக்: நான் வேணா அந்த இடத்தை உங்க ஊர் சிவன் கோவில் பேர்ல பத்திரப்பதிவு பண்ணி அனுப்பி விடவா..?
https://twitter.com/i/status/1695441097198391597

சரவணன். ????
பிரதமர் மோடி படித்த கல்லூரியின் பெயர் மற்றும் மோடி பெற்ற பட்டத்தின் பெயர் என்ன?
ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட வேண்டிய கேள்வி…

ℳsd ❝இதயவன்❞
இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்த விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் பேசுகிறார் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
அப்புறம் உள்ள வந்து கிரகப்பிரவேசம் பண்ணியதை ஒத்துக்கவா முடியும்? !
வசந்த்
ஏன்ணே அவன அடிக்குறீங்க..
பிக்பாஸ் சீசன்-7 ல ரெண்டு வீடு இருக்காமே அதுல எது சின்ன வீடுன்னு கேட்குறாம்பா..
https://twitter.com/krishnaskyblue/status/1695373092821078333
PrabuG
ஞாயிறு வரும்னு எதிர்பார்ப்பதைவிடை அதிகமா, திங்கள் வரக்கூடாதுன்னு எதிர்பார்ப்பது அதிகமானால் நீயும் என் நண்பனே..

கடைநிலை ஊழியன்
அதிமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை – பழனிசாமி திட்டவட்டம் #
இப்ப இருக்குறவங்களே போதும் னு சொல்ல வராரு போல..
https://twitter.com/i/status/1695344660539912535
சப்பாணி
ஆயிரம் பக்க சஸ்பென்ஸ் நாவல் தராத சுவாரஸ்யத்தை அவளின் ஒற்றை deleted msg தரவல்லது.

Er.NithanKrish B.E.,
ஒரு கிலோமீட்டர் ரோடு போட 250 கோடி-னா, ஒரு ஸ்கேல் நீளத்துக்கு ரோடு போட 8 லட்சம் வருதே டா!
~முழுக்க முழுக்க பணத்துலயே ரோடு போட்டாகூட ஒரு அடி நீளத்துக்கு ரோடு போட 8 லட்சம் எப்புட்றா வரும்?.
https://twitter.com/varavanaisen/status/1695096789769367786?s=46&t=JWvKpV8OjNtfPa4bHzFPyQ
சரவணன். ????
மோடி மேடையில் பேசியபடி கண்கலங்கும் போதெல்லாம் ஓட்டுக்கான மதிப்பு தான் கண் முன் வந்து போகிறது

லாக் ஆப்
