அட்லீ சுட்ட இட்லி: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

ஷாருக்கான் நடித்த ஜவான் படம் பாத்துட்டு வந்து பேய் அறைஞ்ச மாதிரி நின்னுகிட்டு இருந்தான் நம்ம நண்பன். ரெண்டே வரியில ரிவ்யூ சொல்லுடானு கேட்டேன். அஞ்சாறு வீட்ல இருந்து மாவை எடுத்து அட்லீ சுட்ட இட்லி வெந்து வேகாமலும் இருக்குனு சொல்லிட்டு ஒரு தலைவலி மாத்திரை போட்டுக்கிட்டான்.

நீங்க அப்டேட் பாருங்க

ADVERTISEMENT

ℳsd ❝இதயவன்
ஜி20 மாநாடு தொடங்கும் நிலையில் வெளிநாடு சென்றார் ராகுல் காந்தி
இவரும் ஜி க்கு ஈக்கோலா மெயிண்டெயின் பண்ணுறாரே வெளிநாடு போறதுல?

ADVERTISEMENT

!

மித்ரன் ????.????????????.????????????
சனாதானத்தை பற்றி முஸ்லிம்கள் பேசுவது தவறு ~ சங்கிகள்
~ முத்தலாக், புர்கா விவகாரத்தில் தலையிடும் போது சுகமா இருந்துச்சா?!

ADVERTISEMENT

Shibin_twitz
திமுக காரனுங்க நீட்டை ஒழிக்குறேன் சனாதனத்தை ஒழிக்குறேனு சொல்றானுங்களே தவிர ,
எவனாச்சும் வறுமையை ஒழிக்கிறேன் , டாஸ்மாக்கை ஒழிக்கிறேன் , ரவுடிசத்தை ஒழிக்கிறேன்னு சொல்றாங்களா பாருங்க .

கீழை மீம்ஸ்
உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதனத்தை பற்றி பேச உரிமை இல்லை – உத்திரபிரதேச முஸ்லீம் மதகுரு மவுலானா ஹபீப் ஹைதர் கூறியுள்ளார்….
~ எந்த மாநிலம்லே?
– உத்திரபிரதேசம்

~செல்லாது…செல்லாது…

சரவணன். ????
சென்னை – பெங்களூரு சாலை ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் – நிதின் கட்கரி.
மதுரை எய்ம்ஸ்க்கு உருட்டுன அதே உருட்டு..

Kirachand
2047-ல் ஊழல்,சாதி, மதவாதத்துக்கு இடமில்லை! – பிரதமர் மோடி
உங்க ஆட்சியில் இப்ப இது எல்லாமே இருக்குன்னு சொல்றீங்க… அப்படித்தானே ஜி?

ச ப் பா ணி
Compromise என்பது அடுத்த சண்டைக்கான இடைவேளை

Dr.Crow
கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த மதசார்பற்ற ஐக்கிய ஜனதாதளம்
~ கட்சி பெரு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆனா கூட்டணி வச்சிருக்கிறது பாஜக கூட… உடம்புல 1008 வியாதி இருக்கவன் பேரு ஆரோக்கியசாமின்னு வச்ச மொமெண்ட்

கடைநிலை ஊழியன்
மேனேஜர் – என்னப்பா ஆபீஸ்க்கு இவ்ளோ லேட்டா வர..
அது வேற ஒன்னும் இல்ல.. இன்னைக்கு இவரு சீக்கிரமா வந்தத ரெஜிஸ்டர் பண்றாராம்..

ℳsd ❝இதயவன்❞
சனாதனம் குறித்த உதயநிதியின் கருத்தில் உடன்பாடில்லை ~ காங்கிரஸ் மூத்த நிர்வாகி பவன் கேரா
காங்கிரஸ் எப்பமா குழப்பத்துல இருந்திருக்கு… குழப்பத்திற்க்குள்ள தான் காங்கிரஸே இருந்திருக்கு எப்பவும்.?!

லாக் ஆஃப்

“அடுத்த படத்தில் மாரிமுத்துவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன்” – மாரி செல்வராஜ்

ஜவானால் தள்ளிப்போகிறதா சந்திரமுகி 2 !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share