அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு : புது அப்டேட் வெளியிட்ட டி.ஆர்.பி!

Published On:

| By christopher

trb release new update on set exam

‘செட்’ தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. trb release new update on set exam

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் நேரடி நியமன போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, செட் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர்- இணை பேராசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.

அத்தகைய விண்ணப்பதாரர்கள் செட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டதும் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர்-இணை பேராசிரியர் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர்“ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share