பதக்கம் வாங்க மறுத்த டி.ஆர்.பி.ராஜா மகன் : வாழ்த்திய அண்ணாமலை – தமிழிசை அட்வைஸ்!

By Kavi

|

Published on 26 Aug 2025, 2:30 PM

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது மகனுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

நேற்று நடைபெற்ற போட்டியை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

இந்த போட்டியில் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன்  சூரிய ராஜ பாலு பங்கேற்று வெற்றி பெற்றிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் பதக்கம் வாங்க வந்த சூரிய ராஜ பாலு, அண்ணாமலை தனது கழுத்தில் பதக்கத்தை போட வருவதை பெற மறுத்து கையில் வாங்கிக்கொண்டார். பின்னர் அண்ணாமலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு அவர், “யார் கையில் பட்டம் வாங்குவது என்பது அவரவர் விருப்பம். அந்த தம்பி எங்கிருந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும். சாதனை படைக்க வேண்டும். அவர் நல்ல மனிதராக வரவேண்டும்” என்று வாழ்த்து தெரிவித்தார்.

அதேசமயம் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 26)செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆளுநராக இருக்கட்டும்… அண்ணாமலையாக இருக்கட்டும்… தகுதிக்கு ஏற்பதான் கல்வி நிறுவனங்கள் சிறப்பு விருந்தினர்களை அழைக்கின்றன. அங்கு விருந்தினராக வருபவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டிய உரிமையும் கடமையும் அவர்களுக்கு உண்டு. அப்போது தனிப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டுவது சரியானதல்ல. திமுக கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது.

இதுபோன்ற காழ்ப்புணர்ச்சி அரசியலை திமுக கைவிட வேண்டும். டி.ஆர்.பி. ராஜா தனது மகனை அழைத்து பாரபட்சமாக நடந்துகொள்ள கூடாது என அறிவுரை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel