சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு… டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Selvam

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிட தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. TRB extend Law College

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01 / 2025. நாள். 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.சி பிரிவினருக்கு ரூ.300 தேர்வு கட்டணமாகும். TRB extend Law College

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share