அரசு பேராசிரியர் வேலை கன்ஃபார்மா? TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… ‘ஆன்சர் கீ’ (Answer Key) வந்துடுச்சு!

Published On:

| By Santhosh Raj Saravanan

trb assistant professor exam answer key released check online

“கல்லூரி பேராசிரியராகி கெத்து காட்டணும்” என்ற கனவோடு, கடந்த மாதம் நடந்த தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் தேர்வர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஒரு சூப்பர் அப்டேட் வந்தாச்சு.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைக்குறிப்பை (Tentative Answer Key) அதிரடியாக வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் 27, 2025 அன்று மாநிலம் முழுவதும் நடந்தது.

ADVERTISEMENT

ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் எழுதிய இந்தத் தேர்வின் ‘உத்தேச விடைக்குறிப்பு’ (Tentative Key) தற்போது TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

செக் செய்வது எப்படி?

ADVERTISEMENT
  • விசிட் பண்ணுங்க: முதலில் trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
  • டவுன்லோட்: முகப்புப் பக்கத்தில் “TRB Assistant Professor Exam – Tentative Answer Key” என்ற அறிவிப்பு ஓடிக்கொண்டிருக்கும். அதை க்ளிக் செய்து PDFஐ டவுன்லோட் செய்யுங்கள்.
  • செக் பண்ணுங்க: உங்கள் கேள்வித்தாள் சீரிஸ் (A, B, C, D) எதுவோ, அதற்கான சரியான விடைகளைச் சரிபாருங்கள்.

மார்க்கில் குளறுபடியா? இதைச் செய்யுங்க!

“சார், நான் கரெக்டா தான் எழுதினேன்.. ஆனா கீ (Key) தப்பா இருக்கே?” என்று நீங்கள் நினைத்தால், கவலையை விடுங்கள். உங்களுக்காகவே ‘Objection Tracker’ வசதியை TRB கொடுத்துள்ளது.

  • காலக்கெடு: ஜனவரி 5 முதல் ஜனவரி 13, 2026 மாலை வரை நீங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்.
  • எப்படி?: இணையதளம் மூலமாக மட்டுமே (Online Mode) ஆட்சேபனைகளைப் பதிவு செய்ய வேண்டும். தபால் மூலம் அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்படாது.

சும்மா மார்க் மட்டும் பார்த்துட்டு விட்றாதீங்க… இதுதான் முக்கியமான நேரம்!

  • புரூஃப் முக்கியம்: “இந்தக் கேள்விக்கு இதுதான் பதில்” என்று சும்மா சொன்னால் போதாது. அதற்கான ஆதாரமாகத் தரமான பாடப்புத்தகங்களின் (Standard Textbooks) பக்கங்களை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும். கைடு (Guide) அல்லது நோட்ஸ் (Notes) செல்லுபடியாகாது.
  • ஒரு மார்க் கூட முக்கியம்: பல நேரங்களில் கட்-ஆஃப் (Cut-off) என்பது 0.5 மதிப்பெண்ணில் கூட மாறும். அதனால், விடையில் தவறு இருப்பதாகத் தோன்றினால், தயங்காமல் அப்ளை பண்ணுங்க.
  • கடைசி வரை வெயிட் பண்ணாதீங்க: ஜனவரி 13ஆம் தேதி வரை டைம் இருந்தாலும், கடைசி நேரத்தில் சர்வர் பிஸியாக வாய்ப்புள்ளது. உடனே முந்துங்கள்!

உடனே TRB இணையதளத்திற்குச் சென்று உங்கள் விடைகளைச் சரிபார்த்து, எவ்ளோ மார்க் வருதுனு கணக்கு போடுங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share