டெட் (TET) இனி வருஷத்துக்கு 2 முறை… டிஆர்பி-யின் அதிரடி காலண்டர் ரிலீஸ்! எப்போ என்ன எக்ஸாம்? முழு விபரம் இதோ!

Published On:

| By Santhosh Raj Saravanan

trb annual planner 2026 tet exam twice schedule released

“வாத்தியார் வேலை எப்போ வரும்? படிச்சது மறந்து போறதுக்குள்ள எக்ஸாம் வைப்பீங்களா மாட்டீங்களா?” என்று விரக்தியில் இருந்த ஆசிரியர் தேர்வர்களுக்கு, ஒரு ஜில்லென்ற செய்தியை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது.

2026ஆம் ஆண்டில் என்னென்ன தேர்வுகள், எந்த மாதத்தில் நடைபெறும் என்ற உத்தேசத் திட்ட அட்டவணையை (Annual Planner 2026) டிஆர்பி நேற்று வெளியிட்டது. இதில் உள்ள ஒரு முக்கிய அறிவிப்பு, டெட் தேர்வர்களுக்கு ‘டபுள்’ மகிழ்ச்சியைத் தந்துள்ளது!

ADVERTISEMENT

டெட் தேர்வர்களுக்கு ஜாக்பாட்: வழக்கமாக இழுத்தடித்து நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET), இனி 2026-ல் இரண்டு முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • முதல் முறை: ஜூலை 2026-ல் டெட் தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகள் நடைபெறும். (இதற்கான அறிவிப்பு மே மாதம் வரும்).
  • இரண்டாம் முறை: டிசம்பர் 2026-ல் மீண்டும் ஒரு டெட் தேர்வு நடைபெறும்.

இதனால், ஒருமுறை தவறவிட்டாலும் அடுத்த வாய்ப்பு உடனே கிடைக்கும்.

ADVERTISEMENT

மாதவாரியாக முக்கியத் தேர்வுகள்: டிஆர்பி வெளியிட்டுள்ள காலண்டரின் படி, முக்கியத் தேர்வுகள் எப்போது வரும் என்று பார்ப்போம்:

  • பிப்ரவரி: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் (Assistant Professor) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு. (ஏற்கனவே தாமதமாகி வரும் இந்தத் தேர்வு பிப்ரவரியில் உறுதியாக வரும் எனத் தெரிகிறது).
  • ஏப்ரல்: இடைநிலை ஆசிரியர்களுக்கான (SGT) போட்டித் தேர்வு நடைபெறும்.
  • ஜூன்: அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் மற்றும் SCERT விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு.
  • நவம்பர்: முதுகலை ஆசிரியர் (PG Assistant) பணிக்கான அறிவிப்பு. (இது கொஞ்சம் லேட் தான்!).

மற்ற தேர்வுகள்: இதுபோக, சிறப்பாசிரியர்கள் (Special Teachers), வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) ஆகிய பதவிகளுக்கும் 2026-ல் அறிவிப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன.

ADVERTISEMENT

இந்தக் காலண்டரை சும்மா பார்த்துட்டு வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைக்கிறது முக்கியம் இல்ல பாஸ். பிஜி டிஆர்பி (PGTRB) நவம்பர்ல தான் வருதுனு அசால்ட்டா இருக்காதீங்க. சிலபஸ் கடல் மாதிரி… இப்பவே படிக்க ஆரம்பிச்சா தான் முடிக்க முடியும். அதேபோல, டெட் பாஸ் பண்ணாதவங்க, இந்த வருஷம் கிடைக்கிற ரெண்டு சான்ஸை பயன்படுத்திக்கோங்க. 

ஏன்னா, அடுத்து நியமனத் தேர்வு (Paper-II) வரும்போது, டெட் பாஸ் பண்ண சர்டிபிகேட் கையில இருந்தாதான் எலிஜிபிள். திட்டமிடுங்கள்… வெல்லுங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share