சென்னையில் குளு குளு பஸ் பயணம்… டிக்கெட் எவ்வளவு?

Published On:

| By Selvam

ரூ.2,000 பயண அட்டையில் ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில் புதிய பஸ் பாஸ் திட்டத்தை சென்னை போக்குவரத்து கழகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. transport department ac bus

சென்னையில் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகள் வசதிக்காக ரூ.320 முதல் ரூ.1000 வரையிலான பயண அட்டை சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ.1,000 பயண அட்டை பெறுவோர் ஏசி தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளிலும் விரும்பம்போல பயணிக்கலாம்.

தற்போது சென்னை போக்குவரத்து கழகத்தில் 50 ஏசி பஸ்கள் உள்பட மொத்தம் 3,056 பேருந்துகள் இயக்கப்படுகிறது. விரைவில் 225 ஏசி பஸ்கள், 650 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

கோடை வெயில் வாட்டி வருவதால் பயணிகள் பலரும் ஏசி பஸ்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர். எனவே, போக்குவரத்து கழகம் புதிதாக ரூ.2000 பயண அட்டையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஏசி பேருந்து உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் பொதுமக்கள் விருப்பம்போல் பயணிக்கலாம். இந்த திட்டமானது மே அல்லது ஜூன் மாதங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. transport department ac bus

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share