உடல் உறுப்பு தானம் வழங்குவோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

Published On:

| By Selvam

transplant government respect

உடல் உறுப்பு தானம் வழங்குவோர் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்பு தான திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞரால் 2007-2008 ஆண்டு காலகட்டத்தில்  கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய வகையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் தானமாக வழங்கப்படுகிறது. உடல் உறுப்புகள் தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இந்தநிலையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரி: ஏசிடிசி நிறுவனர் மீது வழக்குப்பதிவு!

IND vs AUS ODI: முதல் போட்டியில் இந்தியா அபாரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share