முக்கிய துறைகளின் செயலாளர்கள் மாற்றம்!

Published On:

| By indhu

தமிழகத்தில் உள்ள முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 1) உத்தரவிட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

1. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றங்கள் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு ஐஏஎஸ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தலைமைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தலைமைச் செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக டாக்டர்.கே.மணிவாசன் ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ் உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம்.

5. மங்கத் ராம் ஷர்மா ஐஏஎஸ் பொதுப்பணித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

6. லில்லி ஐஏஎஸ் போக்குவரத்துத்துறையின் தலைமைச் செயலாளராக இடமாற்றம்

7. சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் முதன்மை செயலாளராக சந்திர மோகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளராக இருந்த டாக்டர் செந்தில்குமார் ஐஏஎஸ் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றங்கள் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

9. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் செயலாளராக டாக்டர் செல்வராஜ் ஐஏஎஸ் நியமனம்.

10.சமூக பாதுகாப்புத் திட்டத்தின் இயக்குநராக ஜான் லூயிஸ் ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

11.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலராக இருந்த விஜயலட்சுமி ஐஏஎஸ் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் இயக்குநராக மாற்றம்

12. டாக்டர்.வெங்கடாசலம் ஐஏஎஸ் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13. நிலச்சீர்திருத்த ஆணையராக ஹரிஹரன் ஐஏஎஸ் நியமனம்

சந்தீப் சக்சேனா ஐஏஎஸ் டிஎன்பிஎல் தலைவராகவும், சாய் குமார் ஐஏஎஸ் தொழில் முதலீட்டு கழக தலைவராகவும், மகேஸ்வரன் ஐஏஎஸ் உப்புக்கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வைத்தியநாதன் ஐஏஎஸ் அரசு கேபில் டிவி தலைவராகவும், ஜவஹர் ஐஏஎஸ் சமூக சீர்த்திருத்தத்துறை செயலாளராகவும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராகவா லாரன்ஸ் இத்தனை படங்களில் கமிட் ஆகி உள்ளாரா?

கள்ளச்சாராய மரண வழக்கு : உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share