தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்கள் மாலை அணிந்து இருமுடி கட்டிக்கொண்டு செல்வதைப் போல், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பெண்கள் மாலை அணிந்து இருமுடி கட்டிக்கொண்டு சென்று, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வது வழக்கம்.இந்த ஆண்டு பங்காரு அடிகளார் காலமான நிலையில், இந்த மாத இறுதியில் மேல்மருவத்தூரில் தைப்பூச விழா தொடங்குகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எழும்பூர் திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் நவம்பர் 30 முதல் ஜனவரி 25 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனவும் சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் விரைவு ரயில் டிசம்பர் 1 முதல் ஜனவரி.25 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனவும் சென்னை எழும்பூர் – தஞ்சை உழவன் விரைவு ரயில் டிசம்பர் 1 முதல் ஜனவரி.25 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
மேலும் பனாரஸ் – ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் டிசம்பர் 3 முதல் ஜனவரி 21 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனவும் எழும்பூர் – நாகர்கோவில் விரைவு ரயில் டிசம்பர் 7 முதல் ஜனவரி 25 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: முகப் பருக்களைத் தவிர்க்க 10 வழிகள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
