இந்தியாவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் ரயில் டிக்கெட் விலை மிகவும் குறைவு என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய ரயில்வேயில் வழங்கப்பட்டு வந்த மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் பெருந்தொற்று முடிந்து ஏறத்தாழ 5 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை அந்த சலுகைகளை மீண்டும் கொண்டு வர மோடி தலைமையிலான அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட்டின் விலை குறைக்கப்படுமா என இன்று காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வளர்ந்த நாடுகளை விட இந்தியாவை பொறுத்தமட்டில் ரயில் டிக்கெட் விலை மிகவும் குறைவு. அந்த நாடுகளை ஒப்பிட்டால் ரயில் டிக்கெட் விலையில் வெறும் 5 முதல் 20 சதவிகிதமே இந்தியாவில் ரயில் டிக்கெட்டின் விலை உள்ளது.
அதேபோல் இந்தியாவின் அண்டை நாடுகளை ஒப்பிட்டால் நமது நாட்டில் குடிமக்களுக்கும், பயணிகளுக்கும் மிகவும் குறைவான கட்டணத்தில்தான் டிக்கெட் வழங்கப்படுகிறது என்றார்.
இதனால் மீண்டும் மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை வழங்கப்படாது என கூறப்படுகிறது.
