ஆயுத பூஜை தொடர் விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

Published On:

| By Kavi

Train Ticket Booking for Ayudha Puja

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

சென்னையில் தங்கி வேலை செய்யும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக தென் மாவட்ட மக்களுக்கு ரயில் போக்குவரத்துதான் முக்கியமானதாக இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் சௌகர்யமாகப் பயணம் செய்ய ரயில் பயணம்தான் சிறந்தது என்று நினைக்கிறார்கள்.

ADVERTISEMENT

பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி 3 – 4 நாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை வரும்போது, சென்னையில் இருந்து ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டிகள், முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமையும் அதற்கு மறுநாள் 12-ம் தேதி சனிக்கிழமை விஜயதசமி ஞாயிற்றுக்கிழமையும் கொண்டாடப்படுவதால் ரயில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

“பொதுவாக 120 நாட்களுக்கு முன்பே ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அந்த வகையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு ரயில் டிக்கெட்டுகளை அதிக அளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இந்தத் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்” என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

டாப் 10 செய்திகள் : மோடி இத்தாலி பயணம் முதல் நீட் தேர்வு குளறுபடி விசாரணை வரை!

பியூட்டி டிப்ஸ்: டாட்டூவை அழிக்க நினைப்பவரா நீங்கள்?

கிச்சன் கீர்த்தனா: பிரெட் வெஜ் ஆம்லெட்!

பதவியேற்பு விழாவா? தெலுங்கு சினிமாவா? அப்டேட் குமாரு

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share