தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் பலத்த காற்றால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து, இப்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இந்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து 490 கி.மீ தொலைவிலும், காரைக்காலிலிருந்து 310 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்தத் தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலில் திருகோணமலை – யாழ்ப்பாணம் இடையே தாழ்வு மண்டலமாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வு மண்டலத்தின் காரணமாக 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.
இதனால் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில், காற்றின் வேகம் குறையும்போது மீண்டும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
