பயணிகள் கவனத்திற்கு.. பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்!

Published On:

| By Minnambalam Desk

Train service route changed

பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ADVERTISEMENT

எர்ணாகுளம் சந்திப்பிலிருந்து காலை 07.15 மணிக்குப் புறப்பட்டு போத்தனூர் – இருகூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்ட எர்ணாகுளம் டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (N0.18190), ஜூலை 19, 21 மற்றும் 24, 2025 ஆகிய தேதிகளில் போத்தனூர் – கோயம்புத்தூர் – இருகூர் வழியாக இயக்கப்படும்.

ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் (No.13352) ஜூலை 19, 21 மற்றும் 24, 2025 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் சந்திப்பைத் தவிர்த்து, போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். எனவே, அந்த நாட்களில் இந்த ரயில் போத்தனூர் சந்திப்பில் மாற்று நிறுத்தத்தைக் கொண்டிருக்கும். (போத்தனூர் சந்திப்பின் நேரம் – 12.17/12.20)

ADVERTISEMENT

தன்பாத் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், (No.13351) 19.07.2025 முதல் 12.09.2025 வரை 56 நாட்களுக்கு அரக்கோணத்திற்கு முன் ஒரு வசதியான இடத்தில் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும் இதனால் ரயில் சேவையில் தாமதம் ஏற்படும்.

இதேபோல் ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும் சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (N0.12695) ரயில் இன்று (19.,7,2025) முதல் வருகிற ஆகஸ்டு 8-ந்தேதி வரை சென்னையில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு காலை 7.40 மணிக்கு சென்றடையும்.

ADVERTISEMENT

திருவனந்தபுரம் – சென்னை எக்ஸ்பிரஸ் (N0.12696) நாளை (20.7.2025) முதல் வரும் ஆகஸ்ட் 9ந் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் மாலை திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து 5 நிமிடம் தாமதமாக மாலை 5.20 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share