ட்ரூ காலர் தேவையில்லை: நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை!

Published On:

| By Selvam

அனைத்து அழைப்புகளிலும் அழைப்பவர் பெயரை செல்போனில் காட்டுங்கள் என நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு நெட்வொர்க் நிறுவனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். புதிய நம்பர்களில் இருந்து அழைப்புகள் வரும்போது பெயர் வருவதில்லை, நம்பர் மட்டுமே வரும். இதனால் பலர் ட்ரூ காலர் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

ட்ரூ காலர் செயலி இருந்தால் புதிய நம்பரில் இருந்து அழைப்புகள் வரும்போது அதில் பெயரும் சேர்ந்து காண்பிக்கும். இது செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு பேருதவியாக இருப்பதால் பலரும் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தொலைபேசி அழைப்புகளின்போது அழைப்பாளர்களின் பெயரையும் காண்பிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களுக்கும் டிராய் பரிந்துரைத்துள்ளது.

ADVERTISEMENT

டிராய் அமைப்பின் பரிந்துரையை ட்ரூ காலர் நிறுவனம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக ட்ரூ காலர் நிறுவனம் கூறுகையில், இந்தப் புதிய வசதியை அரசு அமல்படுத்தினால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது?

பியூட்டி டிப்ஸ்: அழகான மெஹந்தியைப் பெற இதைச் செய்யுங்க!

தொல். திருமாவளவன் தவிர்க்க முடியாத தலைவராக இருப்பது பெரும் மகிழ்ச்சி – பா.இரஞ்சித்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share